சென்னை, வேலூரைத் தொடர்ந்து திண்டுக்கல் அருகே ஜோசப் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
முதியோர் கொலை விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் அருகே உள்ள ஜோசப் கருணை இல்லத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர்.
Recommended Video

திண்டுக்கல் : ஆதரவற்ற முதியோர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த புகாரில் சிக்கியுள்ள ஜோசப் முதியோர் கருணை இல்லத்தின் கிளைகளிலும் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த ஜோசப் கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான முதியவர்களைக் கொன்று, அவர்களின் உடலைப் பதப்படுத்தி எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதனை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அங்கு ஆய்வு நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அந்த காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்படுவதையும், இறந்தவர்களை பதப்படுத்த தனி சிமெண்ட் அறைகள் இருப்பதையும் ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காப்பக நிர்வாகம் சார்பில், முறையான விளக்கம் தரப்படவில்லை.
இதனையடுத்து அங்கிருந்த முதியவர்கள் அனைவரும் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேலும் ஜோசப் கருணை இல்லத்தின் கிளைகள் உள்ள இடங்களிலும் மக்கள் போராடத் துவங்கியதை அடுத்து, வேலூர் காட்பாடியில் செயல்பட்டு வந்த கருணை இல்லம் நேற்று மூடி சீல் வைக்கப்பட்டது.
இன்று திண்டுக்கல் அருகே கொடைரோடு ஜோசப் கருணை இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த மாதத்தில் மட்டும் 24 முதியவர்கள் இறந்த விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications