தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஹைகோர்ட் தடை- வைகோ வழக்கில் உத்தரவு
மதுரை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தத் திட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி மதிமுக செயலாளர் வைகோ உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில், ‘நியூட்ரினோ ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால், நீர், நிலம், காற்று ஆகியவை பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தப்பகுதியை சுற்றியுள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும்' என வைகோ தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தத் திட்டத்தால் வனவிலங்குகள் மற்றும் விவசாயமும் பாதிக்கப் படும் எனவும் தனது மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த ஆய்வு மையத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் தனது மனுவில் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறும் வரை ஆய்வுப்பணிகளை தொடரக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications