நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் கமிட்டி இன்று 2ம் கட்ட விசாரணை
சென்னை : பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி விசாரணை முடிவடைந்த நிலையில், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் இரண்டாம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம், மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு அழைப்பு விடுத்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.

இதுதொடர்பாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக நிர்மலாதேவியிடம் கடந்த ஐந்து நாட்களாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஷ்வரி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நிர்மலாதேவி இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரை மேலும் சில நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து உள்ளார். ஏற்கனவே, முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள அதிகாரி சந்தானம், இன்று இரண்டாம் கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்.
இதில், நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் குறித்து அவர் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகனிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் நேற்று அவரைக் கைதுசெய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications