ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் பணம் பதுக்கல்? ஐடி அதிரடி ரெய்டு
ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் ஆதரவாளர் ராமச்சந்திரன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தருவதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் ராமச்சந்திரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆர்.கே.நகரில் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை வாரி இறைத்து வருகிறார் தினகரன். ஒரு ஓட்டுக்கு ரூ10,000 வரை லஞ்சமாக கொடுக்கிறார் தினகரன்.

தங்க நகைகள்
அதேநேரத்தில் ஒருவரால் 50 வாக்குகளை கொண்டுவர முடியும் என்றால் தங்க நகைகளை அள்ளிக் கொடுத்து தக்க வைக்கிறாராம் தினகரன். எப்படியும் வென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீர வேண்டும் என்பதுதான் தினகரனின் பேராசையாம்.

பணம் இருக்கிறதே..
என்னதான் சொந்த கட்சியினரே உள்ளடி வேலைபார்த்தாலும் பணம் பாதாளம் வரை பாயும் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கிறாராம் தினகரன். அண்மையில் பணப் பட்டுவாடா செய்த தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தியை போலீஸ் கைது செய்தது.

பணம் பதுக்கல்?
இந்த நிலையில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளரான ராமச்சந்திரன் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ராமச்சந்திரன் வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கிடைக்கவில்லை...
ஆனால் இந்த சோதனையின் போது பணம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதற்கு முன்னரே பணத்தை வேறு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications