சிறிசேனா வருகையை எதிர்ப்பது தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லது அல்ல: தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை அதிபர் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லது அல்ல என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

It's not good to oppose SL president's India visit: Tamilisai

இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவற்றுக்கு தீர்வு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அதிபர் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லது அன்று.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசும், தமிழக பாஜகவும் முனைப்பாக உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை இலங்கை அதிபரின் வரவு அளித்துள்ளது. அவர் இந்தியா வந்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசி பல தீர்வுகள் அளிக்க உள்ளார் என்று தெரிகிறது.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்பட உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+