தேர்தலாவது தமிழகத்தில் நடக்குமா... இல்லை அதுவும் வட மாநிலங்களில்தானா.. தீபா செம கேள்வி!
தேர்தலாவது தமிழகத்தில் நடைபெறுமா இல்லை அதுவும் வடமாநிலங்களில்தான் நடக்குமா என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பினார்.
Recommended Video

சென்னை: தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ? என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்வை ரத்து செய்யக் கோரியும், பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த கோரியும் அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விண்ணப்பங்கள்
இதன்பிறகு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இந்த ஆண்டு தேர்வு நடத்துவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் நாளை தேர்வு நடைபெறவுள்ளது.

மற்ற மாநிலங்களில்
தேர்வே வேண்டாம் என்று கோரிய மாணவர்களை இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை சிபிஎஸ்இ ஏற்காமல் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஏற்படுத்தியது.

மற்ற மாநிலங்களில்
தேர்வே வேண்டாம் என்று கோரிய மாணவர்களை இந்த தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை சிபிஎஸ்இ ஏற்காமல் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஏற்படுத்தியது.

தமிழ் சங்கங்கள் உதவி
இதற்கு கடும் கண்டனம் நிலவியது. ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வுகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்வை பல்வேறு மாணவர்கள் எழுதாமல் விட்டு விட்டனர். எனினும் மற்ற மாநிலங்களுக்கு தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்ட உதவிகளை தமிழ் சங்கங்களும் தன்னார்வல அமைப்புகளும் செய்யவுள்ளன.
|
தீபா கருத்து
தமிழக மாணவர்களை மன ரிதீயில் தோற்கடிக்கச் செய்வதற்காகவே இதுபோன்று சிபிஎஸ்இ செய்துள்ளதாக சீமான் தெரிவித்தார். இதுகுறித்து தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறுகையில் தேர்வு தான் தமிழ் நாட்டில் இல்லை, தேர்தலாவது தமிழ்நாட்டில் நடக்குமா இல்லை அதுவும் வட மாநிலங்களில் தான் நடக்குமா ? என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications