அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டு: சசிகலாவுக்கு மட்டும் ஏன் அழைப்பு? அனைத்து தலைவர்களையும் அழைக்க முடிவு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சசிகலாவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை மட்டும் அழைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க ஜல்லிக்கட்டு விழாக் குழு முடிவு செய்துள்ளது.

வரலாறு காணாத யுகப் புரட்சியை நடத்தி ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்துள்ளது தமிழக இளைஞர் படை. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த சசிகலா நடவடிக்கை எடுத்ததாக சித்தரிக்கிறது ஒரு கோஷ்டி.

Jallikattu Organisers to invite all political party leaders

அத்துடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தரவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு அலங்காநல்லூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக அனைத்து கட்சியினரும் போராடியுள்ளனர்; மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் அழைக்க வேண்டும் என்பது அலங்காநல்லூர் பொதுமக்களின் கருத்து. இதனால் தற்போது அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+