பிரதமரே கூறினாலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் வாபஸ் இல்லை.. அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு
போராட்டத்தை கைவிட மாட்டோம் என அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் இணைந்து அறிவித்துள்ளனர். வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கைவிடுக்க உள்ளார். இதையடுத்து இன்று இரவே அவர் டெல்லி கிளம்ப உள்ளார். முன்னதாக போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் இதை ஏற்று போராட்டத்தை கைவிட மாட்டோம் என அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் இணைந்து அறிவித்துள்ளனர்.
வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். பிரதமரே கூறினாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டத்தை கைவிட்டால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்காது என்று அவர்கள் கூறிவிட்டனர். எனவே இன்று இரவும், அலங்காநல்லூர் மக்களோடு, வெளியூர்களில் இருந்து வந்துள்ள இளைஞர்களும், போராட்டத்தை தொடரப்போவது உறுதியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications