திமுகவின் 2ஜி ஊழல் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வரு கிறார்.

திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.வனரோஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்கிழமை பிரசாரம் செய்தார்.

Jaya Plays NGO Card to Put MK on the Mat

இதற்காக செங்கம் அருகே உள்ள அம்மாப்பாளையம் கிராமத்தில் பிரம்மாண்ட மான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாராளுமன்ற வடிவில் அமைக்கபப்ட்ட மேடையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

காங்கிரசிடம் இருந்து இந்தியாவை காப்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. விடுதலைக்கான தேர்தல் என்றார்.

பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது. மத்திய அரசில் பாதுகாப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர் ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் திமுகவும் அங்கம் வகித்ததாக கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்தியாவுக்கு திமுக தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதாக விமர்சித்தார். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், அதனை திமுக ஆதரித்ததாலும் விலைவாசி உயர்வு ஏற்பட்டதாக ஜெயலலிதா கூறினார். திமுக ஆட்சியில் மின்னுற்பத்திக்கு தேவையான அளவு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திடம் நடந்து கொண்டது. மத்திய அரசின் ஆதரவு இல்லாத நிலையிலும் விலைவாசியை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. மதிப்பு கூட்டு வரி தமிழகத்தில் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. விரைவில் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும். சிறுபான்மையினர் நலனில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமது தலைமையிலான அரசு மேற்கொண்ட நலத்திட்டங்களையும் ஜெயலலிதா பட்டியலிட்டார். தமிழகத்தில் உலமாக்களுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, வக்பு வாரியத்திற்கு கூடுதல் மானியம் போன்றவற்றை அதிமுக அரசு செய்திருப்பதாக ஜெயலலிதா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+