ஜூன் 21... ஆர்.கே.நகரில் ஜெ. 'சூறாவளி' பிரசாரம்... ஒரேநாளில் 5 இடங்களில் வாக்கு சேகரிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா வரும் 21ம்தேதி தேதி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியில் ஒரேநாளில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயலலிதா வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இ.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 32 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போது இத்தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட்வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியினரும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதா வரும் 21-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 21-ந் தேதி ஞாயிறன்று மாலை 3 மணிக்கு மேல் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து பிரசார வேனில் புறப்படும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 இடங்களில் வாக்குசேகரிக்க உள்ளார்.

ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications