ஹய்யோ.. ஹய்யோ... சேகரு சேகரு...!
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது மனைவியை சந்திப்பதற்காக சுடிதார் போட்டுக் கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்றார். எல்லாவற்றையும் சரியாக செய்தவர், கடைசியில் ஆண்கள் போடும் செருப்பைப் போட்டுப் போனதால் குழந்தையைக் கடத்த வந்தவர் என்று கருதப்பட்டு தர்ம அடி வாங்கும் நிலை ஏற்பட்டது.
27 வயதான சேகரிந் மனைவி பெயர் இந்திரா. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார் சேகர். பின்னர் வேலையை விட்டு விட்டு ஊர் திரும்பினார். வேலை இல்லாத நிலையில் தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்த இந்திராவைப் பார்க்கப் போனார் சேகர். தன்னுடன் வருமாறும் கூப்பிட்டுள்ளார். ஆனால் உனக்கே வேலை இல்லை என் மகளை அனுப்பி என்ன புண்ணியம் என்று கேட்டு திட்டி அனுப்பி விட்டார் மாமியார்.

அதிருப்தி அடைந்த சேகர் மனைவியைப் பார்க்க முடியவில்லையே என்று வேதனை அடைந்தார். இந்த நிலையில் அவருக்குள் ஒரு நூதன ஐடியா உதித்தது. பெண்வேடம் போட்டு மாமியார் வீட்டுக்குள் புகுந்து மனைவியைச் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்தார். இதனால் மேக்கப் போட்டார். தலைக்கை ஜடை வைத்து பெண்ணாக மாறினார்.. சுடிதார் போட்டு எடுப்பான தோற்றத்துடன், ஜம்மென்று மாமியார் வீட்டுக்குச் சென்றார்.
திண்டிவனத்தில்தான் அவரது மாமியார் வீடு உள்ளது. அந்த வீட்டை நோக்கி நடை போட்ட சேகரை பலரும் உற்றுப் பார்த்தனர். சிலர் உஷாராகினர். உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.. ஏன் இந்தத் தர்ம அடி என்று கேட்கிறீர்களா.. எல்லாவற்றையும் சரியாக செய்த சேகர், கடைசியில் ஆண்கள் போடும் செருப்புடன் வந்ததே மக்கள் கொடுத்த அடிக்குக் காரணம். மேலும் இரு நாட்களுக்கு முன்புதான் அப்பகுதியில் ஒரு குழந்தை கடத்தப்பட்டது. இதனால் இவரை குழந்தைக் கடத்தல்காரர் என மக்கள் நினைத்து விட்டார்.
அடி தாங்க முடியால் தனது கதையைக் கூறி கதறியுள்ளார் சேகர். இதையடுத்து இந்திராவுக்குத் தகவல் போய் அவர் ஓடி வந்தார். அவர் வந்த பிறகுதான் மக்கள் அடிப்பதை விட்டனர். பின்னர் இருவரையும் போலீஸ் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு வைத்து இந்திராவுக்கும், சேகருக்கும் போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications