கேப்டன் டிவி நிருபர், கேமராமேன் மீது தாக்குதல்- சாலை மறியல் செய்த நிருபர்கள் கைது

திங்கட்கிழமையன்று காலை டாடா இன்டிகா காரில் கேப்டன் டிவி செய்தியாளர் லாவண்யா தலைமையில் ஒளிப்பதிவாளர் விமல், உதவி ஒளிப்பதிவாளர் வெங்கடேசன், ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் செய்தி சேகரிக்க புறப்பட்டனர்.
காருக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டி மதுரவாயலில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மதுரவாயல் தனியார் பள்ளியின் வாகனம் ஒன்று கேப்டன் தொலைக்காட்சியின் இன்டிகா கார் பெட்ரோல் நிரப்ப முடியாதபடி வந்து நின்றது. இதனை பார்த்த கேப்டன் தொலைக்காட்சி வாகனத்தின் ஓட்டுனர் சம்பவம் பற்றி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.
இரண்டு வாகனங்களுமே தொடர்ச்சியாக பெட்ரோல் நிரப்ப வருபவை என்பதால் இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். அதற்குள் பள்ளியின் வாகன ஓட்டுனர் கேப்டன் தொலைக்காட்சியின் இன்டிகா காருக்குள் அத்துமீறி நுழைந்து இன்ஜினை இயக்கி காரை நடுச்சாலையில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். இதனை தடுக்க முற்பட்ட கேப்டன் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாவண்யாவை அவதூறாக பேசியதுடன், தாக்கவும் முற்பட்டுள்ளார். அத்துடன் கேப்டன் தொலைக்காட்சியின் ஓட்டுனர் சுரேஷ் மீது இன்டிகா காரின் சாவியையும் தூக்கி எறிந்துவிட்டு பள்ளியின் வாகன ஓட்டுனர் சென்றுள்ளார்.
சம்பவம் பற்றி மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று லாவண்யா புகார் அளித்துள்ளார். ஆனால் சம்பவம் நடைபெற்ற பெட்ரோல் பங்க் மதுரவாயல் லிமிட்டில் இல்லை என்று கூறி செய்தியாளரை காவலர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று கருதியும், தொடர்ந்து பல்வேறு பணிகள் இருந்த காரணத்தினாலும் சம்பவம் பற்றி வேறு எங்கும் புகார் அளிக்காமல் லாவண்யா தனது குழுவினருடன் செய்தி சேகரிக்கச் சென்றுவிட்டார். கேப்டன் தொலைக்காட்சியை பொறுத்தவரை காலை பணிக்கு வரும் செய்தியாளர் குழுவிற்கும், மாலை பணிக்கு வரும் செய்தியாளர் குழுவிற்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு. ஆனால் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் ஒன்று மட்டுமே. எனவே இரண்டு வாகனத்தை சேர்ந்தவர்களும் ஏதேனும் ஒரு இடத்தில் சந்தித்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை மாற்றிக் கொள்வது வழக்கம்.
இந்த வழக்கத்தின்படியே, இரண்டு இன்டிகா கார்களையும் மதுரவாயல் பாலத்தின் அருகே நிறுத்தி உபகரணங்களையும் லாவண்யாவும், பிற்பகல் செய்தியாளர் சதீசும் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பள்ளியின் ஓட்டுனர், லாவண்யாவை அடையாளம் கண்டு மீண்டும் பிரச்சனை செய்துள்ளார். இதனை சக செய்தியாளர் சதீஷ் தட்டிக்கேட்கவே தாக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்கள் தாக்கப்படுவதை பார்த்த ஓட்டுனர்கள் பள்ளியின் ஓட்டுனரை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் அகாடமி பள்ளியின் இதர ஓட்டுனர்கள் சுமார் 30 பேர் அங்கு திரண்டு கேப்டன் தொலைக்காட்சியின் செய்தியாளர் குழுவைச் சேர்ந்த எட்டு பேரையும் அடித்து உதைக்க ஆரம்பித்துள்ளனர். பெண் என்றும் பாராமல் லாவண்யாவையும் சிலர் அடித்ததுடன், தகாதா வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் பாபு என்பவரும் பள்ளியின் டிரைவர்களுக்கு ஆதரவாக சில கருத்துகளை கூறியும், கேப்டன் தொலைக்காட்சிக்கு எதிராக சில வார்த்தைகளை பேசியும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களை தாக்கியுள்ளார்.
நாற்பதுக்கும் மேற்பட்ட கும்பலால் தாக்கப்படுவதால் நிலை குலைந்து நின்ற கேப்டன் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஊழியர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து செய்தியாளர் சதீஷ், ஒளிப்பதிவு உதவியாளர்கள் பிரகாஷ், வெங்கட் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கேப்டன் டிவி சார்பில் அளிக்கப் பட்ட புகார் மனுவை வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.அதற்குள் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து ஊடகவியலாளர்களும், பத்திரிகையாளர்களும் மதுரவாயல் காவல் நிலையத்தில் திரண்டனர். மொத்தமாக 100 பேர் சேர்ந்ததை தொடர்ந்து செய்தியாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைவரும் ஒன்றாக இணைந்து முழக்கமிட்டனர்.
உதவி ஆணையர் செந்தில்குமரன் செய்தியாளர்களிடம் வந்து கோரிக்கையை கேட்டார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும் அவர் சென்று விட்டார். பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால் கூடுதல் ஆணையர் ஜெயவேல், இணை ஆணையர் சேவியர் தன்ராஜ் மதுரவாயல் காவல் நிலையம் வந்தனர்.
அவர்கள் வந்த பிறகு முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது மிக எளிதான பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். கொலை முயற்சி பிரிவை அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை. எனவே முதல் தகவல் அறிக்கையை ஏற்க கேப்டன் டிவியினர் மறுத்துவிட்டனர்.
இரவு பத்தரை மணிவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள் சாலையில் அமர்ந்து போராடினர். இதனையடுத்து செய்தியாளர்களை குண்டுகட்டாக போலீசார் தூக்கி வேன்களுக்குள் வீசி எறிந்தனர். சில பத்திரிகையாளர்களை மட்டும் போலீசார் குறி வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட செய்தியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு இடங்களில் போலீசார் அடைத்து வைத்தனர். காலையில் விடுவித்தனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications