தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன்!
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன்!- வீடியோ
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டங்களின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இந்த ஒரு நபர் விசாரணை கமிஷனின் தலைவராக நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications