ஜெ. மரணத்தை விசாரிக்க ஆணையம்.. இது ஓர் அரசியல் சித்து விளையாட்டு.. ராமதாஸ் அதிரடி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்பது அரசியல் சித்து விளையாட்டு என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அவர் வாழ்ந்த போயர்ஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி இணைவதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனினும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், மதுரை மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று தினகரன் பேசியதால்தான் முதல்வர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரண மர்மம் குறித்த விசாரணை ஆணையம். இது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம்; இதனால் தான் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை
— Dr S RAMADOSS (@drramadoss) August 17, 2017
இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஜெயலலிதா மரண மர்மம் குறித்த விசாரணை ஆணையம். இது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம்; இதனால் தான் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.
-
பயிர் கடன் ரத்துக்கு வரவேற்பு.. முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை வைத்த ராமதாஸ் -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications