சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் கவுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வால் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை தற்காலிகமாக நீதிபதி எஸ்.கே.அக்னி கோத்ரி கவனித்து வருகிறார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கவுல் இருந்து வருகிறார். அடுத்த வாரம் அவர் சென்னை வந்து பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications