திமுககாரர்கள் காலில் விழக்கூடாது.. ஸ்டாலின் அறிவிப்பிற்கு கி. வீரமணி பாராட்டு
தன்னைப் பார்க்க வரும் யாரும் காலில் விழக் கூடாது என்று அறிவித்துள்ள ஸ்டாலினுக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுயமரியாதையை காக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாகவும் வீரமணி பாராட்டியுள்ளார்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக அண்மையில் பொறுபேற்ற மு.க. ஸ்டாலின், தன்னை பார்க்க வரும் யாரும் காலில் விழக்கூடாது என்று கூறினார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தன்னைப் பார்க்க வரும் எவரும் காலில் விழக்கூடாது என்று தி.மு.க.வின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை விடுத்திருப்பது அறிந்து, தாய்க்கழகமாம், திராவிடர் கழகம் எல்லையற்ற மகிழ்ச்சியுடன், அவரை மிகவும் பாராட்டி மகிழ்கிறது.

'மானமிகு சுயமரியாதைக்காரர்!' என்று கருணாநிதி தம்மை குறிப்பிட்டுக் கொள்வார். மானமிகு சுயமரியாதைக்காரராக அந்நிலைக்கு இதன்மூலம் உயர்ந்து, சுயமரியாதை காக்க முன்வந்துள்ளார் நமது ஸ்டாலின் அவர்கள்!
தமிழ்ப் புத்தாண்டு மலரும் நிலையில் இத்தகைய மனித நேயமும், சுயமரியாதையும் அனைத்து கட்சிகளிலும் பெருகட்டும், வளரட்டும்!
அன்பும், பணிவும் காட்டுவது தவறல்ல; காலில் விழுவது மனித மாண்புக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு என்பதை பெரியார் சீடர்களாகிய நாம் சொல்லி, வழிகாட்டாமல் வேறு எவர் காட்டுவர்?
தி.மு.க. செயல் தலைவரின் செயல் பரிமளிக்கிறது! பளிச் சிடுகிறது! வாழ்க! வளர்க என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
முன்னதாக. தொலைபேசியிலும், மு.க.ஸ்டாலினுக்கு கி. வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!











Click it and Unblock the Notifications