காடுவெட்டி குரு போலீஸ் பாதுகாப்பு கோரி மனு: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
இதையடுத்து எனது சொந்த தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி சென்று கொண்டிருந்தபோது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள குமரக்குடி என்ற இடத்தில் எனது வாகனத்தை ஒரு கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியது. இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் எம்.எல்.ஏ.வாகவும், வன்னியர் சங்க தலைவராகவும் உள்ளேன். இதனால் எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பியிடம் கடந்த 14-ந் தேதி மனு கொடுத்தேன். இதுநாள் வரை எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.
என்னுடைய உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குவது தமிழக போலீசாரின் கடமை ஆகும். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications