முதல் குற்றவாளியாக மாணவியின் தாய்..கள்ளக்குறிச்சி கலவர வழக்கு! 24,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து பள்ளியில் ஏற்பட்ட கலவர வழக்கு தொடர்பாக 916 பேர் மீது 24 ஆயிரம் மக்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை இந்த அளவுக்கு அதிகமான குற்றவாளிகளுக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது இல்லை என்கின்றனர் போலீசார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி 2022 ஜீலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரை நியமித்து அபோதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களை கைது செய்தனர்.
இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விதமான சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட யூட்யூபர்கள், வாட்ஸப் குழு அட்மின்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பள்ளி மாணவி மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி கலவரத்துக்கு காரணமானதாக பிரபல யூடியூப் சேனல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது. மேலும், பிரபல முன்னாள் செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்களின் யூட்யூப் சேனல்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து பள்ளியை தாக்கி சூறையாடியதாக வழக்கு தொடரப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசிக பிரமுகர் உள்ளிட்டோரிடம் கணியமூர் கலவர விசாரணை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தியதோடு ஏராளமானவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 916 பேர் மீது 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 666 பேர் மீது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையும், 53 இளம் சிறார்களுக்கு எதிராக சிறார் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. சேலத்தில் இருந்து பாதுகாப்புக்காக வந்த வாகனங்களை அடித்து உடைத்தது தொடர்பாக 120க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பசு மாடுகளை திருடி சென்றதாக ஐந்து பேர் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கலவர வழக்கில் முதல் குற்றவாளியாக உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும், இரண்டாவது குற்றவாளியாக விசிகவை சேர்ந்த திராவிட மணி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் 58 பேர் மீதும், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 858 பேர் மீது என மொத்தம் 996 பேர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications