Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளியில் சொல்ல கூடாதாம்.. படத்தின் பெயரில் இருக்கலாமாம்.. ஜாதி விஷயத்தில் கமல்ஹாசன் டபுள் கேம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜாதி விஷயத்தில் கமல் என்ன சொல்கிறார்?- வீடியோ

    சென்னை: சாதியை ஒழிப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி பெயரை தவிர்க்க வலியுறுத்தினார் நடிகர் கமல் ஹாசன்.

    ஆனால் அவரது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ள 'சபாஷ் நாயுடு' என்ற ஜாதி பெயரை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கிறேன் என்று கூறி நெட்டிசன்களிடமிருந்து கேள்விகளை பெற்று அதற்கு பதில் அளித்தார் நடிகர் கமல்ஹாசன்.

    டிவிட்டரில் பதில்

    டிவிட்டரில் பதில்

    ஜாதியை அடுத்த தலைமுறை கொண்டு செல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன் எனது இரண்டு மகள்களின் பள்ளி சேர்க்கை சான்றிதழிலும் ஜாதி மற்றும் மதத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அடுத்த தலைமுறைக்கு ஜாதி ஒழிப்பு செல்வதற்கு இதுதான் சரியான வழி என்று தெரிவித்திருந்தார். இந்த பதிலுக்கு இணையதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

    சர்ச்சை பதில்

    சர்ச்சை பதில்

    ஜாதி பெயரை சான்றிதழில் தெரிவிக்காவிட்டால் மட்டும் ஜாதி ஒழிந்துவிடுமா? மேலும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் பல்வேறு பேட்டிகளில் தனது ஜாதியை குறிப்பிட்டு உள்ளாரே என்று வினவினர். இதனிடையே பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்தின் பெயரில் ஜாதிப்பெயர் உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் கூறுகையில், சபாஷ் நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இப்போது படத்தின் பெயரை மாற்றுவதற்கான தேவை கிடையாது. படத்தின் பெயரில் ஜாதிப் பெயர் இருப்பதாலேயே ஜாதியை கொண்டாடுவதாக ஆகிவிடாது என்று தெரிவித்துள்ளார்.

    சபாஷ் அடைமொழி

    சபாஷ் அடைமொழி

    சபாஷ் என்ற அடைமொழியுடன் ஒரு ஜாதியின் பெயரை குறிப்பிடப்பட்டிருந்தும் கூட இந்த படம் தலைப்பு, ஜாதியை கொண்டாடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளி சான்றிதழில் ஜாதி பெயரை குறிப்பிடாததாலேயேஜாதியை தவிர்த்து விடலாம் என்று கூறிய கமல்ஹாசன் பல லட்சம் மக்களை சென்றடைய கூடிய சினிமா என்ற சாதனத்தில் சபாஷ் என்ற அடைமொழியுடன் ஒரு சாதிப் பெயரைக் குறிப்பிடுவது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.

    தொடரும் சர்ச்சை

    தொடரும் சர்ச்சை

    ஏற்கனவே 'தேவர் மகன்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் நடித்ததும், அதில் குறிப்பிட்ட ஜாதியை புகழ்ந்து ஒரு பாடலில் கமல்ஹாசன் நடித்ததும் இன்னும் சர்ச்சையாக சுற்றி வரும் நிலையில், மீண்டும் ஜாதிப்பெயரை புகழும் வகையில் ஒரு படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டு, அதை மாற்ற மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறுவது அவரது இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+