தினமும் ரூ.7 கோடி செலவு.. திமுக முடக்கிய 6,000 கோடி திட்டம்.. மின் கொள்முதல் குறித்து நிர்மல்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. மின் கொள்முதல், விலைவாசி உயர்வு, அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் உள்ளிட்ட ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மின் கொள்முதலில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பீக் ஹவருக்கு தேவையான மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய போகிறோம். திமுக கிரிமனல் வேஸ்ட் செய்ததால், 6,000 கோடி மதிப்பிலான அனல்மின் நிலையம் முடங்கியுள்ளது என்று நிர்மல்குமார் கூறினார்.

சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மின்பற்றாக்குறைக்காக டெண்டர் கோரியுள்ளோம். அதைப்பற்றி நேற்றும் விளக்கியிருந்தோம். இப்போது அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பீக் ஹவர்ஸ்களில் 1,000 மெகாவாட் மட்டுமே கொள்முதல் செய்ய போகிறோம். 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் தான் கொள்முதல் செய்ய போகிறோம். இதற்காக பல்வேறு விலை பட்டியல் வந்துள்ளது.

we-will-purchase-electricity-of-peak-hours-only-said-nirmalkumar

பீக் ஹவரில் மட்டும்

யூனிட்டுக்கு ரூ.33 முதல் 35 வரை வாங்க போகிறோம். இதனால் ஒரு நாளுக்கு ரூ.5 கோடி முதல் 7 கோடி கூடுதல் செலவினமாகும். சாய்ங்காலம் பீக் ஹவர்ஸ் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தான் மின்சாரம் வாங்க போகிறோம். இதற்காகவே கூடுதல் செலவு. நீண்ட காலத்திற்கான டெண்டர் விடுவதற்கான பணி நடக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணி தொடங்கும். திமுக தரப்பில் பல பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டுமே நீண்ட காலத்திற்கான கான்ட்ராக்ட் போடப்பட்டது. அதன் பிறகு மின்சார வாரியம் நீண்ட கால ஒப்பந்தம் போடவில்லை. இனி வரும் காலங்களில் நீண்ட கால ஒப்பந்தம் அதிகம் போடும். இதன் மூலம் நம் தேவையை நிறைவேற்றுவோம். சோலார் அப்ளிகேஷன் கடந்த 4 மாதங்களாக எதுவும் வாங்கவில்லை. நாம் பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கையை கட்டாயமாக்க போகிறோம். அனுமதி கிடைத்தவுடன் சோலார், பேட்டரி ஸ்டோரேஜ் கொள்கை சேர்த்து அறிவிப்போம்.

தனிப்பட்ட காரணங்களால்

இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். அதிக கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 3,500 மெகாவாட் அறிவித்திருந்தாலும், நமக்கு எவ்வளவு தேவையா அதை மட்டும் கொள்முதல் செய்வோம். தீபாவளி பண்டிகை காலம் இருப்பதால் பற்றாக்குறை பற்றி யோசனை செய்து முடிவு செய்யப்படும். அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

அதுவரை மட்டுமே கொள்முதல் செய்வோம். நம் சொந்த உற்பத்தி 5,300 மெகாவாட் தான். மீதி மின்சாரம் எல்லாம் வெளியில் இருந்து தான் வாங்குகிறோம். கடந்த திமுக அரசு கிரிமினல் வேஸ்ட் செய்துள்ளது. உப்பூர் அனல் மின் நிலையத்தை அப்படியேவிட்டுவிட்டனர். 6,000 கோடிக்கு முதலீடு செய்து, அவர்களின் தனிப்பட்ட காரணங்களால் கைவிட்டனர். நாங்கள் அதை செயல்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.

திமுக பொய் தகவல்

எல்லாம் தெரிந்து கொண்டே திமுக விமர்சனம் செய்கிறது. சிலர் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு கொள்முதல் என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் மின் தடை செய்கிறார்கள். நாம் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக அதை செய்யாமல் சந்தையில் கொள்முதல் செய்கிறோம். மத்திய அரசின் நிறுவனங்களிடமே கொள்முதல் செய்கிறோம். மின் கொள்முதல் குறித்து திமுக பொய்யான தகவலை பரப்புகிறது. டெண்டர் முறையில் தான் எடப்பாடி முதலமைச்சரானார்"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+