தியானம் கடமை என்றால் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுவதும் கடமைதான்.. விஜயேந்திரருக்கு கமல் சுளீர்!
தியானம் செய்வது கடமை என்றால் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பதும் கடமைதானே என்று விஜயேந்திரருக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்வது கடமை என்றால் அதற்கு எழுந்து நிற்பதும் கடமைதானே என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

சர்ச்சை கிளம்பியது
ஆனால் அவர் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது.

சங்கர மடம் விளக்கம்
மேலும் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் அவர் எழுந்து நின்றார். இதற்கும் எதிர்ப்பு வலுத்ததை அடுத்த சங்கர மடம் விளக்கம் அளித்தது. அதில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்றும் , தேசிய கீதம் பாடும்போது நாட்டுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நின்றார் என்றும் சப்பைக் கட்டு கட்டியது.

கடமைதான்
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜயேந்திரர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை. தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை.

விஜயேந்திரருக்கு கமல் கண்டனம்
தியானம் செய்வது கடமை என்றால் எழுந்து நிற்பதும் கடமைதான் என்று கூறிய கமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications