அரசியலில் நானும் ரஜினியும் எதிரும், புதிரும்தான்... ஆனால் ஒன்று மட்டும் உறுதி - கமல்
அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என்பதில் நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என்பதில் நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் மற்ற தலைவர்களை சந்திக்கும் முன்பே தான் ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் என்றும் கமல் தெரிவித்தார்.
கமல்ஹாசன் நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்காக மதுரையில் பொதுக் கூட்டத்தை நடத்தி அதில் அறிவித்தார்.
அதற்கு முன்னதாக சென்னையில் தனக்கு பிடித்தமான தலைவர்களை கமல் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

போயஸ் தோட்டத்தில்
ரஜினியை கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் கமல் சந்தித்தார். அப்போது மதுரை பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் பொதுக் கூட்டத்துக்கு செல்லும் முன் தனக்கு பிடித்தமானவர்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது விளக்கம்
கட்சியை கமல் தொடங்கிய நிலையில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதில் அனைவரையும் சந்திக்கும் முன்பே நடிகர் ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்.

வாழ்த்து
"யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம் மக்களிடம் உள்ளது என என்னை வாழ்த்தி அனுப்பினார் ரஜினி". அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என ரஜினியும் நானும் முடிவெடுத்துள்ளோம்.

ரஜினியிடம் கூறினேன்
பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கட்சி ஆரம்பிக்கும் முடிவை ரஜினியிடம் கூறிவிட்டேன். காலா படப்பிடிப்பின்போதும் அவரை ரகசியமாக சந்தித்து எனது முடிவை தெரிவித்தேன் என்றார் கமல்ஹாசன்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications