அதிமுகவினரை ஒரு பக்கம் மீசையின்றி பார்க்க தயாராக இல்லை- கனிமொழி எம்.பி.
அதிமுகவினரை ஒரு பக்கம் மீசையின்றி பார்க்க நாங்கள் தயாராக இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவினரை ஒரு பக்கம் மீசையின்றி பார்க்க நாங்கள் தயாராக இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
காவிரி விவகாரம் பூதாகரமாக ஆக யார் காரணம் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குறை கூறிக் கொள்கின்றனர்.ஆனால் தீர்வு என்னவோ கிடைத்தது போல் தெரியவில்லை.

1972-ஆம் ஆண்டு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள இந்திரா அரசுக்கு பயந்து கொண்டு உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதுபோல் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து அதிமுக அரசு வாதாட வைக்கவில்லை என்று திமுகவும் குறை கூறி வருகிறது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் காவிரி பிரச்னையை தீர்க்க திமுக என்ன செய்தது என்பதை ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஏதேனும் ஒரு தகவலை ஸ்டாலின் கூறினால் ஒரு பக்க மீசையை அதிமுகவினர் எடுத்துக்கொள்வர்.
மத்தியில் அங்கம் வகித்த போது காவிரி விவகாரத்தில் என்ன செய்தது திமுக? என்று சரமாரி கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கனிமொழி எம்.பி. பதில் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை கனிமொழி எம்பி சந்தித்து பேசினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் அதிமுகவினரை மீசையில்லாமல் பார்ப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பில் அரசியல் இல்லை என்று கனிமொழி தெரிவித்தார்.
-
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications