தாக்குதல் பீதி... சென்னையில் கன்னடப் பள்ளிகள் இழுத்து மூடல்!!
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் வன்முறைகள் வெடிக்கும் என்பதால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது போன்றே தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயங்கும் கன்னடப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கே, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தேறின.

இதனால் தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னையிலும் கன்னடருக்கு சொந்தமான உட்லண்ஸ் ஓட்டல் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள கன்னட சங்கம் சார்பில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சென்னையில் கன்னடருக்கு எதிராக வன்முறை ஏதாவது நடக்குமோ என்ற பயத்தில் இந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அயன்புரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த கன்னட பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications