தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே எட்டிப் பார்க்காத நிலையில் குமரியில் அன்புமணி : நெகிழும் மக்கள்
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதித்த பகுதிகளையும், மீனவ மக்களையும் பா.ம.க இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் இன்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஓகி புயலால் தென் மாவட்டங்கள் பலத்த மழை பெய்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. மேலும், மக்களின் வீடுகள், சாலைகள், விளை நிலங்கள் என அனைத்தும் மிகுந்த சேதமடைந்து உள்ளன. மீனவ கிராமங்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்களைக் காணவில்லை. இதனால், மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.

கடும் கோபத்தில் மக்கள்
இதுவரை புயலால் பாதிப்படைந்த எந்த ஒரு பகுதியையும் அந்த மாவட்டத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து சந்திக்கவில்லை. மாவட்டம் முழுவதும் பலத்த சேதமடைந்து உள்ள நிலையில், வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் தங்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் யாரும் கேட்க வராததால், மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் மட்டுமே மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.

முதல்வருக்கு அன்புமணி கேள்வி
இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்தார். மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அன்புமணி. இதுவரை காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு என்ன செய்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது குறித்தும் கண்டனம் தெரிவித்தார் அன்புமணி.

பாதிக்கப்பட்ட விவசாயிகள்
அதன் பின், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழைத் தோட்டங்கள், ரப்பர் மரத்தோட்டங்களை ஆய்வு செய்தார் அன்புமணி. மழையால் ஒரு லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமடைந்திருப்பதாகவும் , இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அவர்கள் மீண்டு வர தகுந்த நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதுவரை பாதிப்பு குறித்த எந்த ஒரு சேத மதிப்பீடும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்ட அன்புமணி அதையும் விரைந்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாநில அரசு மீது குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மீட்புப்பணிகளுக்காக 25 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது எடப்பாடி தலைமையிலான மாநில அரசு. இந்தத் தொகை எதற்குமே போதுமானது அல்ல. எம்.ஜி.ஆர் விழாவிற்கு 500 கோடி செலவு செய்யும் அரசின் இந்தப் போக்கு சரியானது அல்ல. புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதே இத்தனை இழப்பிற்கும் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவில் மீட்புப்பணிகளில் அந்த மாநில முதல்வர் மற்றும் நிர்வாகம் செயல்படுவதைப் பார்த்தாவது தமிழக ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களுக்காக மருத்துவ முகாம்
சாமித்தோப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பாக, நிவாரணப் பொருட்கள் வழங்கி அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் அன்புமணி. மேலும், பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். தமிழக அரசை நம்பி இருக்காமல் நிவாரண உதவிகளையும், மீட்புப் பணிகளையும் பா.ம.க தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தங்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகளே இதுவரை தங்களைச் சந்திக்காத நிலையில், அன்புமணி ராமதாஸ் தங்களை வந்து சந்தித்து இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நெகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications