அமில வீச்சில் உயிரிழந்த காரைக்கால் வினோதினியின் தாயார் தற்கொலை

தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார்.
இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதே தினத்தில் மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வினோதினியின் தாயார் சரஸ்வதி நேற்று நள்ளிரவு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். வினோதினி தாக்குதலின்போதே சரஸ்வதி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்தான்.
சீர்காழி அருகே திருக்கடையூரில் தனது கணவருடன் வசித்து வந்தார் சரஸ்வதி. நேற்று கணவன், மனைவிக்கு இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரஸ்வதி விஷம் குடித்து விட்டார்.
உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகி்ச்சை பலனளிக்காமல் சரஸ்வதி நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications