ஏவுகணை நாயகர் அப்துல் கலாமுக்கு காரைக்குடி பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலி
காரைக்குடி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்றனர்.

முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய ஏவுகணைத் திட்ட தந்தையுமான டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 28.07.2015 காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார். அச்சமயம் அப்துல கலாம் அவர்களின் சாதனைகள், மாணவர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாடு, அவர் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவித்துள்ள தகவல் பற்றி பட்டதாரி ஆசிரியர் கோமதி மாணவர்களுக்கு கூறினார்.

பின்னர் ஆறாம் வகுப்பு மாணவன் அழகப்பன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பற்றி இரங்கல் கவிதை வாசித்தான். மாணவர்கள் அனைவரும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறிய 10 உறுதிமொழிகளைக் கூறி அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதாக உறுதி ஏற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications