கல்லிலே கலை வண்ணம் கண்ட தஞ்சையில்.. காரைக்குடி மாணவர்கள்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தஞ்சாவூருக்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
முதலில் மாணவர்கள் இராஜ இராஜனின் மணிமண்டபத்தைப் பார்வையிட்டனர். பின்னர் தஞ்சாவூர் பெரிய கோவிலின் பிரமாண்டத்தை கண்டு அதிசயித்தனர்.
அங்கு அவர்களுக்கு அக்கோயிலின் நந்தியின் சிறப்பு, கோவில் கலசத்தின் சிறப்பு, கட்டிட அமைப்பு, இராஜ இராஜ சோழனின் சிறப்புகள் குறித்து கூறப்பட்டது.

கல்வெட்டுக்கள்
கோவில் சுவர்களில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள், செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள், வரையப்பட்டுள்ள ஓவியங்களை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சிவகங்கை பூங்கா
பின்னர் சிவகங்கை பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவர்கள் ஊஞ்சல், சறுக்குமரம், படகு சவாரி என ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்தனர்.

சரஸ்வதி மஹால் நூலகம்
சரபோஜி மன்னரின் அறிய பொக்கிஷமான சரஸ்வதி மஹால் நூலகம் அழைத்து செல்லப்பட்டார்கள். அங்கு மாணவர்கள் பல்வேறு வகையான காட்சிப் பொருட்களைப் பார்வையிட்டன்.

பனை ஓலை நூல்கள்
பனை ஓலையால் எழுதப்பட்ட நூல்கள், பல மொழிகளால் எழுதப்பட்ட நூல்கள், எழுத்தாணி, நூலக வாயிலில் வரையப்பட்ட ஓவியங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கற் சிற்பங்கள், கற் குண்டு, கற்களினால் உருவாக்கப்பட்ட ஜன்னல், சரபோஜி மன்னரின் சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திமிங்கலத்தின் எலும்பு ஆகியவற்றை பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் தல வரலாறு
அங்கு தஞ்சாவூர் தல வரலாறு குறித்த ஒலி, ஒளி காட்சி காண்பிக்கப்பட்டது. அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இக் களப் பயணத்திற்க்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா செய்திருந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications