கருணாநிதி 94: கோபாலபுரம் வந்த ராஜாத்தியம்மாள் - களை கட்டிய பிறந்தநாள் விழா
கருணாநிதியின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ராஜாத்தியம்மாலும், கனிமொழியும் காலை முதலே கோபாலபுரம் வந்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் விழாக் கோலம் பூண்டுள்ளது.
வீட்டு வாசலின் முகப்பு பகுதி வாழை தார்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இல்லம் முழுவதும் மலர்களால் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லாத்தின் முன்பாக குவிந்துள்ளனர்.
தொண்டர்களின் வாழ்த்து கோஷம் கோபாலபுரம் பகுதியில் எதிரொலித்துக் கொண்டுள்ளனது.

பிறந்தநாள் ஆசி
மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், கருணாநிதியை சந்தித்து பிறந்தநாளுக்கு ஆசி பெற்றனர். தயாநிதிமாறன் வந்து கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

ராஜாத்தியம்மாள் வருகை
ஆண்டுதோறும் தனது பிறந்தநாளன்று சிஐடி காலனியில் ராஜாத்தி அம்மாள், கனிமொழியுடன் மரக்கன்று நட்டு கொண்டாடுவார் கருணாநிதி இந்த ஆண்டு உடல்நலக்குறைவினால் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதால் பிறந்தநாளன்று காலையிலேயே தனது மகளுடன் கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தார்.

கனிமொழி ஆசி
கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழி, கருணாநிதி விரைவில் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறினார்.

கோபாலபுரத்தில் உற்சாகம்
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு கோபாலபுரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இனிப்புகளைக் கொடுத்தும் வாழ்க கோஷமிட்டும் தங்கள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் திமுக தொண்டர்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications