என்னது தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறிவிட்டதா?: ஜோக் என்கிறார் கருணாநிதி
சென்னை: தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறிவிட்டது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய நகைச்சுவை என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
15வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது. 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஆளுநர் ரோசய்யா வாசித்தார்.

ஆளுநர் உரை பற்றி கருத்து கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, ஆளுநர் ரோசய்யாவின் உரை கொள்கை குறிப்பு இல்லாத வெற்று அறிக்கை என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் அவர்கள் இன்று (16-6-2016) படித்த உரை - வெறும் சம்பிரதாய உரையாக - வழக்கம் போல அ.தி.மு.க. ஆட்சியின் "அம்மா" திட்டங்களை பட்டியலிடும் புராணமாக - சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைச் சந்தித்த போது வைத்த கோரிக்கைகளையே மீண்டும் நினைவுபடுத்திச் சொல்லும் உரையாகத் தான் உள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்திற்கான அறிவிப்புகள், இந்த உரையில் இடம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, தேர்தல் அறிக்கையில் கூறிய அறிவிப்புகளில் முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களே தவிர, புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத உரையாக இருப்பது அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, முல்லைப் பெரியாறு, நதி நீர் இணைப்பு, கச்சத் தீவு போன்ற பிரச்சினைகள் 20-1-2016 அன்று ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்ட உரையில் இடம் பெற்ற பிரச்சினைகளாகும். மின்மிகை மாநிலமாக தமிழகம் ஆகி விட்டதாக ஆளுநர் உரையிலும் கூறப்பட்டுள்ளது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை.
ஒவ்வொரு நாளும் நாளேடுகளைப் பிரித்தால், மின்தடை காரணமாக பல மணி நேரம் மக்கள் அவதி என்று செய்திகள் வந்து கொண்டே உள்ளன. அது போலவே தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகள் பற்றியும், புதிய வேலை வாய்ப்புகள் பற்றியும் ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஆளுநர் உரை முரண்பாடுகள் நிறைந்த - ஏமாற்றத்தையே தருகிற - கொள்கைக் குறிப்புகள் எதுவுமில்லாத வெற்றறிக்கையாகவே உள்ளது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications