தாயார் நினைவிடத்தில் வணங்கி திருவாரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் சட்டசபை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.
திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கருணாநிதி. இதையொட்டி இன்று மதியம், 12.45 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காரில் வந்தார் கருணாநிதி.

இதன்பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து மீனாட்சியிடம், கருணாநிதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் முன்பாக, கருணாநிதி அவரது தாயார் அஞ்சுகம் அம்மாள், நினைவிடத்துக்கு சென்று வணங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications