புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி... ஒன்றுபட்டு உழைத்திடுவோம்: கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து
சென்னை: "புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி" ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட ஆங்கில புத்தாண்டு வாழ்த்து அறிக்கை:
2014-ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் என கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது. அனைத்துவகைத் தொழில் களும் முடங்கிவிட்டன; புதிய தொழில்களும் இல்லை. தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது;

வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது. ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள்.
செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன. விலைவாசி உயர்வு எல்லாவகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது.
வேதனையைத் தீர்க்க வேண்டியவர்கள் மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின்றனர். இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்படவேண்டும்.
கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும் பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட -களம் கண்டிட -"புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி" ஒன்றுபட்டு உழைத்திடுவோம். புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications