கருணாநிதி நேற்று சிறிது நேரம் உட்கார்ந்தாராமே..!
கருணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தொண்டர்களே... உங்களுக்கு ஒரு நற்செய்தி. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை மேலும் மேம்பட்டு அவர் சிறிது நேரம் சேரில் அமரும் அளவுக்கு தேறியுள்ளார் என்பதே அந்த செய்தி.
கருணாநிதி உடல்நிலை குறித்து நாடே கவலையில் மூழ்கியுள்ளது. இந்திய அரசியல் தலைவர்களிலேயே இப்படி ஒரு அசாத்திய திறமை வாய்ந்த தலைவருக்கு உடல்நலம் குன்றிவிட்டதே, அபாய கட்டத்துக்கு எல்லாம் சென்றுவருகிறாரே என்று ஒவ்வொரு தமிழரும் வருத்த மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

ஆறுதல் செய்திகள்
தீவிர தொண்டர்களில் சிலரோ அதிர்ச்சியிலும், மனவேதனையிலும் உயிரிழக்கின்றனர். மேலும் சிலரோ தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற திமுக விசுவாசிகளுக்கெல்லாம் மன ஆறுதல் தரும்படி காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் நல்ல தகவல் சொல்லியுள்ளது.

நாற்காலியில் கருணாநிதி
கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றிரவு அவரை இருக்கையில் சிறிது நேரம் அமர வைத்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், நாற்காலியில் அமர வைத்து கருணாநிதிக்கு சிறிது நேரம் பயிற்சிகளும் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.

மருந்து வேலை செய்கிறது
அவருக்கு தரப்படும் மருந்துகள் நன்றாக வேலை செய்வதுடன், அந்த மருந்துகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தேவைப்பட்டால்தான் செயற்கை சுவாசம் பொருத்துகிறோம்.. இல்லையென்றால் இயல்பாகவே அவர் சுவாசிக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பூரிப்பில் தொண்டர்கள்
இது போதுமே தொண்டர்களுக்கு... செயற்கை சுவாசம் பொருத்தப்படாத புகைப்படங்கள் வெளியானதுக்கே தொண்டர்கள் குஷியானார்கள். தற்போது நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடிகிறது என்று தெரிந்தால் இன்னும் பூரித்தே போய்விடுவார்கள்!
அடுத்த போட்டோவை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க சார்!
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications