சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கருணாநிதி
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்

செய்தியாளர்: ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழ் மாநில அரசே அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம் என்று மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: இது ஒரு சட்டப் பிரச்சினை. அதைப் பற்றி ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையும் சொல்லக் கூடாது.
செய்தியாளர் :- தமிழக அரசுக்கே அவசரச் சட்டம் கொண்டு வர அதிகாரம் இருப்பதாக மத்திய அரசின் அமைச்சர் ஒருவரே இன்று கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: இதைப்பற்றி ஏற்கனவே நான் என்னுடைய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேனே?
செய்தியாளர் :- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பேசும்போது, வரக் கூடிய பொதுத் தேர்தலில் அவர்களுடைய கட்சி அமோக வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி:- அது அவர்களுடைய எதிர்பார்ப்பு!
செய்தியாளர் :- வரக் கூடிய தேர்தலில் தி.மு.கழகத்தின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
கருணாநிதி:- பிரகாசமாக இருக்கிறது.
செய்தியாளர் :- தி.மு. கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் பேசப்படுகின்ற அளவுக்கு இருக்கும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி எந்த நிலையில் இருக்கிறது.
கருணாநிதி:- தேர்தல் அறிக்கை எழுதப்பட்டு வருகிறது. மிக விரைவில் அது வெளி வரும்.
செய்தியாளர் :- ஜல்லிக் கட்டுப் பிரச்சனையில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சொல்லப்படுகிறதே?
கருணாநிதி:- நான் அப்படி நினைக்கவில்லை.
இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications