நான் எப்ப மந்திரிச்ச கயிறை கையில் கட்டினேன்.. கருணாநிதி ஆச்சரியம்!
சென்னை: தனது கையில் மந்திரிக்கப்பட்ட சிவப்புக் கயிறு இருப்பதாக வெளியாகியுள்ள செய்தியில் சற்றும் உண்மை இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
கேள்வி: கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது என்றும், அதன் காரணமாக ஆந்திராவிலிருந்து யாரோ அனுப்பிய மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கையிலே கட்டியிருப்பதாகவும் ஒரு செய்தி நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்துள்ளதே?
பதில்: அதன் புளுகுகளில் இதுவும் ஒன்று. 13-12-2015 அன்று "வேலூரில் உள்ள பிரபல மடாதிபதி அறிவுரையைக் கேட்டு, சிவப்பு நிற பட்டையுடன் கூடிய, கைக்கடிகாரத்தை கருணாநிதி அணிந்துள்ளார். இக் கடிகாரத்தை சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார்" என்று வெளியிட்டதோடு, யார் யாரையோ ஜோதிடர்களையெல்லாம் சந்தித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் வெளியிட்டிருந்தது.
என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது..ஓராண்டிற்கு மேலாக அணிந்திருக்கும் அதே கடிகாரம்.https://t.co/GZiOwEHnne pic.twitter.com/75rDXxx9kH
— KalaignarKarunanidhi (@kalaignar89) December 14, 2015 அதே நாளேடு, இன்று அந்தச் செய்தியில் மாற்றம் செய்து, திமுக தலைவர் கருணாநிதி, தன் இடது கையில் ஒரு வாரமாக சிவப்பு பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்துடன், ஆந்திர மாநில தர்காவில் இருந்து வந்த மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிறையும் சேர்த்துக் கட்டியிருப்பதாகவும், அதைப் பற்றி திமுக வட்டாரங்கள் கருத்து கூறியதாகவும் வெளியிட்டுள்ளது.
என் கையில் எந்தக் சிவப்பு கயிறும் கிடையாது. கையிலே உள்ள சிவப்பு நிறப் பட்டையுடன் கூடிய கைக்கடிகாரம் நான் ஓராண்டிற்கு மேலாக கையிலே அணிந்திருக்கும் அதே கடிகாரம் தான்! அதற்கும் எந்த முக்கியத்துவம் கிடையாது.
யாரோ ஒரு சிலர் இதனை நம்பக் கூடும் என்பதற்காக அந்த நாளேடு இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுகிறதோ, என்னவோ? என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications