2016ல் கருணாநிதி ஆட்சி பீடத்தில் அமர்வார்: பிரபல ஜோதிடர் திருச்சிற்றம்பலம் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடக்கும் குருபெயர்ச்சியால் திமுக தலைவர் கருணாநிதி 2016ம் ஆண்டு ஆட்சி பீடத்தில் அமர்வார் என்று பிரபல ஜோதிடர் திருச்சிற்றம்பம் கணித்துள்ளார்.

இன்று இரவு குருபெயர்ச்சி நடக்கிறது. இதையொட்டி பிரபல சென்னை ஜோதிடர் திருச்சிற்றம்பலம் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகங்களை ஆராய்ந்துள்ளார்.

ஆய்வுக்குப் பிறகு அவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா நிலை

ஜெயலலிதா நிலை

சிம்மராசிக்காரரான ஜெயலலிதா ரிஷப லக்னம், மக நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் பிறந்தவர். 67 வயது 4 மாதங்களைக் கடந்திருக்கும் அவருக்கு இன்னும் ஒரு வருடம் 20 நாட்களுக்கு சனி புத்தி நீடிக்கிறது. இந்த நிலையில் ஜென்மாதிபதியான குரு சிம்மத்திற்கு வருகிறார்.

பின்னடைவு ஏற்டுமாம்

பின்னடைவு ஏற்டுமாம்

குருதிசையில் சனிபுத்தி வேறு. இது அவருக்கு பலத்த பின்னடைவைத் தரும். ராமனை ஜென்ம குருதான் காட்டுக்கனுப்பினார். அவர் தான் மகுடத்தைப் பறித்தார். எனவே இது போன்ற நிலையை ஜெயலலிதா சந்திக்க வேண்டியிருக்கும்.

கருணாநிதிக்கு உச்சம்

கருணாநிதிக்கு உச்சம்

ரிஷப ராசிக்காரரான கருணாநிதி கடக லக்னத்தில், மிருகசிரீடம் நடசத்திரத்தில் பிறந்தவர். ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்றிருப்பதால், அவர் சொல்வதே வேத வாக்காக இருக்கும். அவர் எடுக்கும் முடிவிற்கு மாற்று என்ற ஒன்று இருக்காது.

ஓராண்டுக்கு பலன் இருக்காது

ஓராண்டுக்கு பலன் இருக்காது

புதனும் சுக்கிரனும் ஒன்றாக சேர்ந்திருப்பதால் தான் மிகப்பெரிய கலைவித்தகராக இருக்கிறார். அதே சமயம் கருணாநிதியின் ராசியைப் பொறுத்தவரை 3-ஆம் இடத்திலிருந்து 4 -ஆம் இடத்திற்கு இப்போது குரு வருகிறது. இது அவருக்கு ஓராண்டுக்கு அரசியலில் சாதக பலன்களைத் தராது.

2016ல் பலன் கிடைக்கும்

2016ல் பலன் கிடைக்கும்

அதே சமயம், 2016 மேயில் 4 ஆம் இடத்திலிருக்கும் குரு 5வது இடத்திற்கு வருவது மிகப்பெரிய சாதகத்தைக் கொடுக்கும். அப்போது அவர் இழந்த பதவியைப் பெறுவார். மீண்டும் பதவி பீடத்தில் அமர்வார். இவரால் புத்திர வாரிசுக்கு யோகம் உண்டு என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+