மெரினாவில் இடம்... கடைசி போராட்டத்திலும் வென்றார் கருணாநிதி
கடைசி போராட்டத்திலும் கருணாநிதி வெற்றி பெற்றார்.
Recommended Video

சென்னை: மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவையடுத்து கடைசி போராட்டத்திலும் கருணாநிதி வெற்றி பெற்றார்.
கருணாநிதி உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் திமுக கோரிக்கை வைத்தது. ஆனால் இதை தமிக அரசு ஏற்க மறுத்தது.

இதையடுத்து திமுகவினர் நீதிமன்றத்தை நாடினர். நேற்றைய தினம் இரவு 10.30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இன்று காலையும் திமுக வழக்கறிஞரும், அரசு வழக்கறிஞரும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்டாலினும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழுது தொண்டர்களை பார்த்து கைகூப்பினார். கருணாநிதி பிறவி போராளி என்று கூறுவதுண்டு. அவர் எத்தனையோ முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும் அவரது மன திடத்தால் அதில் வெற்றி கண்டார்.
அவரது இறப்பு செய்தியை பலமுறை கேட்டு சிரித்தும் உள்ளார் என்று கூறுவதுண்டு. இந்நிலையில் இறுதியாக "இட" ஒதுக்கீட்டு போராட்டத்திலும் கடைசியாக வெற்றி பெற்றார் கருணாநிதி. தொண்டர்கள் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
இந்த சந்தோஷம் நேற்றைய தினம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் என்று வந்திருக்க கூடாதா என்று தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications