ஐபிஎல் தாக்குதல் வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது.. சிறையிலிருந்து வெளியே வருகிறார் கருணாஸ்
சென்னை: ஐபில் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் எம்எல்ஏ கருணாசுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்எல்ஏ கடந்த 23ம் தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது இன்று காலை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சென்னையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக கொலைமுயற்சி வழக்கும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் போலீசார் மனு அளித்தனர்.
ஆனால் கருணாஸ் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, இந்த குற்றச்சாட்டில் கருணாசை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அவரது வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு கருணாஸ் மீதான கொலைமுயற்சி வழக்கை ரத்துசெய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கை மட்டும் ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று மாலை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கருணாசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications