சுத்தமா சமைக்கணும்! சாம்பாரில் உப்பு இருக்கா? கையில் ஊற்றி ருசி பார்த்த கதிர் ஆனந்த் எம்.பி.!
வேலூர்: வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பரிசோதித்தார்.
சுத்தமான பாத்திரங்களில் உணவு சமைக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்ட கதிர் ஆனந்த், சாப்பாடு மற்றும் சாம்பாரில் உப்பு, காரம், சரியாக உள்ளதா என்பது குறித்தும் அதனை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

வேலூரில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆய்வு செய்தார் . அப்போது மருந்துகள் மாத்திரைகள் நோயாளிகளுக்கு முறையாக வழங்கபடுகிறதா என்று மருந்து பற்றாகுறை எதுவும் உள்ளதா எனவும் அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து நோயாளிகளை சந்தித்த கதிர் ஆனந்த் உங்களுக்கு முறையாக சிகிச்சைகள் அளிக்கபடுகிறதா என கேட்டார். அடுத்ததாக நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் இடத்தை பார்வையிடச் சென்றதால், இதனை எதிர்பார்க்காத மருத்துவர்களும், ஊழியர்களும் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.
வாளி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சாம்பாரை கலக்கிவிட்டு கரண்டியில் தனது கையில் ஊற்றி அதனை குடித்துப் பார்த்த கதிர் ஆனந்த், நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவு என்பதால் தூய்மையில் சமரசமின்றி நடந்துகொள்ள வேண்டும் என உயர் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த கதிர் ஆனந்த் எம்.பி., ''ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையானது வேலூரில் முக்கியமான மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மத்திய மாநில அரசுகள் குழு அமைத்து என்ன மேம்பாடுகளை செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் உட்பட பலர் அடங்கிய குழுவை அமைத்துள்ளன.''
''இந்த மருத்துவமனை தொழிலாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆனால் இடப்பற்றாக்குறை உள்ளது. இதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் கேட்டுள்ளனர். அதற்கான பணிகளை துவங்கவுள்ளோம், இடமும் தேர்வு செய்ய உள்ளோம். விரைவில் இடம் தேர்வு செய்யப்படும், மத்திய அரசின் உதவியுடன் 100-படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும்.''
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications