For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் குறித்து அவரவர் விருப்பத்திற்கு சித்தரித்து கற்பனையான தகவல்களை பரப்ப வேண்டாம் என அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தேர்வு குறித்து இன்னும் முழுமையான தகவல் தேசிய தலைமையிடம் இருந்து வராத சூழலில் அவரவர் மன விருப்பத்திற்கு ஏற்றார்போல் வதந்திகளை பரப்பி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதிய தலைவர்

புதிய தலைவர்

தமிழக பாஜக புதிய தலைவர் குறித்து பல்வேறு விதமான வதந்திகளும், சித்தரிப்புகளும், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்திகளை பரவ விட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிவாகவில்லை

முடிவாகவில்லை

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என இன்னும் முழுமையாக முடிவு எடுக்கப்படாத நிலையில், இது போன்ற செய்திகள் உண்மையில்லை என அவர் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு சில வாரங்கள் கூட ஆகக்கூடும் என பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டுகன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு

தகவல்

தகவல்

தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டவுடன் அது தொடர்பான தகவல் முறையாக தெரிவிக்கப்படும் என்றும், அதற்குள் அவசரப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

தமிழக பாஜக புதிய தலைவராக அவர் வருவார், இவர் வருவார் என கடந்த ஒரு வார காலமாகவே யூகங்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் கேசவ விநாயகம்.

English summary
kesava vinayagam says,Tamil Nadu BJP leader issue Do not portray your wishes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X