கிருஷ்ணகிரியில் காதல் ஜோடியை பிரித்த போலீசார் - விஷம் குடித்த காதலன் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தஞ்சம் கேட்டு வந்த காதல் ஜோடியை பிரித்து, காதலியை பெற்றோருடன் அனுப்பி வைத்ததால், காதலன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாப்பாரப்பட்டியை சேர்ந்த கோமதியும், கல்லாவியை சேர்ந்த ரஞ்சித்குமாரும், பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

Krishagiri boy attempt suicide at Police station

இவர்களது காதலுக்கு கோமதி வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்கள் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், காதல் ஜோடியை பிரித்த காவல்துறையினர், கோமதி கடுமையாக மறுப்பு தெரிவித்தும், அவரை கட்டாயப்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காதலன் ரஞ்சித்குமார், விஷம் அருந்தி தற்கொலை முயன்றார். இதையடுத்து அவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A teen age boy Ranjith kumar attempt suicide at Police station In Uthangarai in Krishnagiri district.
Please Wait while comments are loading...