Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: விடுதலை செய்யப்பட்ட 11 பேர் விபரம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: 94 பேரை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஜூலை 16, 2004ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் ஏற்பட்ட கொடூர தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்த நிலையில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

எஞ்சிய பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 21 பேர் மீதான வழக்கில் இன்று (புதன்கிழமை) தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது அலி தீர்ப்பு அளித்தார்.

Kumbakonam school fire tragedy - 11 acquitted

குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில், 11 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவர்கள் விபரம்

தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, அப்போதைய தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், உதவி தொடக்க அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்க அலுவலர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி.

ஆகியோர் தீவிபத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், தீவிபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நீதிபதி முகமது அலி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+