Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணத்தில் பரபர சம்பவம்.. முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு.. துண்டான இளைஞரின் இடது கை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம் : கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் இடது கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இன்று திருக்கோடிக்காவலில் உள்ள டிஎன்சி அருகே சென்றிருந்த ஐயப்பனிடம் பிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Kumbakonam: Young mans left arm severed by a sickle

அப்போது இருவருக்கும் கடும் வாய்த்தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த பிரகாஷ், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த செல்வமணி, முருகதாஸ், லெனின், பாலகிருஷ்ணன் ஆகியோரின் உதவியோடு, மறைத்து வைத்திருந்த அறிவாளால் ஐயப்பனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஐயப்பனின் வலது கை துண்டானது. மேலும் வலது காலில் பலத்த காயமும், வலது கையில் மூன்று விரல்களும் துண்டானது. மேலும், வெட்டுப்பட்ட ஐயப்பனை அருகே இருந்த ஆற்றின் கரையில் தூக்கி வீசி விட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பந்தநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்துக்கொண்டிருந்த ஐயப்பனை உடனடியாக மீட்டு, முதலில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பந்தநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில், பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக நண்பர்களுடன் இணைந்து அரிவாளால் வெட்டியதில் வாலிபரின் இடது கை துண்டான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+