கள்ளக்காதலுக்காக "காதலனையே" போட்டு தள்ளிய சுதா... 12 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட சுவாரஸ்யம்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

தக்கலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவரை கொலை செய்த பெண்ணை 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம், பள்ளியாடி பேராணிவிளையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40), கட்டட தொழிலாளியாக இருந்தார். அவருடைய மனைவி சுதா (37). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராஜசேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்து மனைவி மகனை பார்த்த அவர், அதன் பின்பு திடீரென காணாமல் போய்விட்டார்.
கணவர் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சுதாவிடம் கேட்டபோது, கணவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவே பொய் கூறி வந்தார். ஆனால் ராஜசேகர் பல ஆண்டுகளாக மனைவி மகனை பார்க்க வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

போலீஸில் புகார்
இதுபோல் சுதா மீது ராஜசேகரின் அண்ணன் ரவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜசேகர் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுதா ஒப்புதல்
இதையடுத்து சுதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதிலை அவர் தெரிவித்தார். இதையடுத்து மேலும் சந்தேகம் வலுத்ததால் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. முடிவில் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்த்து தானே கொன்று விட்டு சடலத்தை வீட்டின் பின்பக்கம் இருந்த கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கணவரின் நண்பர்
காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட சுதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் அளித்த வாக்குமூலத்தில் , நானும் ராஜசேகரும் கடந்த 2003-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது நண்பர் ஆன்லின் ஷிபு என்பவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதனால் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டோம். உல்லாசத்திற்கு தடையாக இருப்பதால் கணவர் ராஜசேகரை வெளிநாட்டுக்கு செல்லுமாறு கூறினேன்.

காதலுக்கு இடையூறு
முதலில் மறுத்தார். பிறகு நான் கட்டாயப்படுத்தியதை அடுத்து அவர் சென்றுவிட்டார். என் மகனையும் ஹாஸ்ட்டலில் சேர்த்து படிக்க வைத்து வந்தேன். சில ஆண்டுகள் கழித்து கணவர் மீண்டும் வீட்டுக்கே வந்துவிட்டார். இதனால் எங்கள் காதலுக்கு இடையூறாக இருந்தது. அதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். கடந்த 2007-ஆம் ஆண்டு நானும் ஆன்லினும் ராஜசேகரை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு அவரது உடலை கழிவறை தொட்டியில் போட்டு புதைத்தோம்.

உல்லாச வாழ்க்கை
2013-ஆம் ஆண்டு வரை கொலை நடந்த வீட்டில் இருந்த நான் கருங்கல் பகுதியில் வாடகைக்கு சென்றுவிட்டேன். அங்கு செல்வின் ராபர்ட் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தேன். அதன் பிறகு, தேங்காப்பட்டணம், புதுக்கடை என பல இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். கணவர் வெளிநாட்டில் உள்ளதை போலீஸாரும் நம்பிவிட்டனர் என்று நினைத்து நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் என்னை கண்டுபிடித்து விட்டனர் என்று சுதா வாக்குமூலம் அளித்தார். 11 ஆண்டுகளாக ஊரையும் உறவினர்களையும் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்த சுதா கடைசியில் சிக்கிக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications