பிளாட்பார குழந்தைகள் கடத்தல்... கதறி அழுத லதா ரஜினிகாந்த்.. நடவடிக்கை கோரி மனு!
சென்னை: சென்னையில் நடைபாதையில் தூங்கிய பெற்றோரின் பச்சிளம் குழந்தைகள் திருடப்பட்டதை அறிந்து லதா ரஜினிகாந்த் கதறி அழுதார். குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் தனது தயா பவுண்டேஷன் மூலம் போலீஸ் கமிஷனரிடம் மனுவும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் பார்த்திபன் கூறுகையில், "சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் என்னோடு தொலைபேசியில் பேசினார். கதறி அழுதபடி அவர் போனில் பேசினார். என்ன பிரச்சினை? ஏன் அழுதுகொண்டே பேசுகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன்.

'இன்று காலையில் பத்திரிகையில் வந்த செய்தியை படித்தேன். என் மனசு தாங்கல. பிளாட்பாரத்தில் பெற்றோருடன் தூங்கிய 2 குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகவும், அந்த குழந்தைகள் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் செய்தி வந்துள்ளது, அந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது.
கடத்தப்பட்ட குழந்தை ஒன்று ஆண் குழந்தை, இன்னொன்று பெண் குழந்தை. இரண்டுமே பச்சிளம் குழந்தைகள்.
இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு, நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் எனது தலைமையில் இயங்கும் பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பிலும், லதா ரஜினிகாந்த் நடத்தும் தயா பவுண்டேஷன் சார்பிலும், எம்.பி.நிர்மல் அவர்களின் எக்ஸ்னோரா அமைப்பின் சார்பிலும் போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.
எங்கள் கோரிக்கை மனுவை படித்து பார்த்த போலீஸ் கமிஷனர் ஏற்கனவே அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கண்டிப்பாக காணாமல் போன குழந்தைகள் மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட இணை போலீஸ் கமிஷனரோடும், போனில் தொடர்பு கொண்டு பேசி துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அவரது உடனடி நடவடிக்கைகள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது," என்றார்.
புகார் கொடுத்த பார்த்திபனிடம் பிளாட்பாரத்தில் தூங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்க, விரைவில் அதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளப் போவதாகவும் பார்த்திபன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications