மதுவுக்கு எதிராக போராடி வரும் மதுரை சட்ட மாணவி நந்தினிக்கு வீட்டுக் காவல்!
மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நீக்கி பூரண மதுவிலக்கினை அமல்படுத்தக் கோரி இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகின்ற நிலையில் மதுவிலக்கிற்காக போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுரை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவி நந்தினி. தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து மதுக்கடைகளை மூடக் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்.

இந்நிலையில் காந்தியவாதி சசிபெருமாளின் இறப்பினைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பூரண மதுவிலக்கு கோரி குடிகாரர்களின் கால்களில் விழுந்து குடியை விடக் கோரி போராட்டம் நடத்தியவர் சசி பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மாணவி நந்தினியைப் போராட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதற்காக அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது மதுரை காவல்துறை. நந்தினியுடன் கூடவே அவரது தந்தை ஆனந்தனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இருவரும் பந்த் முடியும் வரை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று காவல்துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications