விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டி சட்ட மாணவர்கள் சாலை மறியல்
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு: பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி 21 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்று பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் செங்கல்பட்டு புதிய பேருந்து நிறுத்தம் ஒன்று கூடி சுருக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு சாலை மறியலில் திடீரென ஈடுபட்டனர்.
அப்போது, விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது என்றும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் செங்கல்பட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications