சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்து வந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் லட்சுமி சுதா (58). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் லட்சுமி சுதா கொலை செய்யப்பட்டுள்ளார். நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சுமி சுதா உடலை கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள வித்யோதயா மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்த சாந்தி (65) என்ற மூதாட்டி கடந்த திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக சாந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், லட்சுமி சுதா என்ற பெண் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொலை செய்வது ஒரு தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. தி.நகரில் மட்டும் பல பெண்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாந்தி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சில தினங்களில் மற்றொரு கொலை மேற்கு மாம்பலம் பகுதியில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications