சிவகங்கையில் கனமழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
காரைக்குடி: சிவகங்கை அருகே கனமழை கொட்டியதில் மின்னல் தாக்கி ஸ்கூட்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் கோடை மழை கொட்டிவருகிறது. சிவகங்கை, காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

கோடை மழை என்பதால் இடியும், மின்னலுமாய் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏராளமானோர் மழைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றனர். எனினும் சிவகங்கையை அடுத்த கீழக்குவானிபட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் ராஜகுமாரி என்ற இரு பெண்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மின்னல் தாக்கியது. இருவரும் உடல் கருகி இறந்தனர்.
இருவரும் அக்கா தங்கைகள் ஆவர். இதில் மகேஸ்வரிக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி அவர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கை ராஜகுமாரி ஸ்கூட்டியில் சென்றபோது அவருக்கு பின்னால் மகேஸ்வரி உட்கார்ந்து சென்றுள்ளார். மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications