இருட்டுக்கடை அல்வா... பால்கோவா... ஜிகர்தண்டா டேஸ்ட் பார்த்த ஸ்டாலின்
சென்னை: குமரியில் தொடங்கி திருச்சி வரை 13 நாட்கள் நமக்கு நாமே விடியல் மீட்பு முதற்கட்ட பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவருடைய தந்தையும், திமுக தலைவர் கருணாநிதியிடம் இரும்பு மனிதர் என்ற பெயரை பெற்று விட்டார்.
நமக்கு பயணத்திற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று ஆளுங்கட்சி தரப்பு யோசித்துக்கொண்டிருக்க, அதெல்லாம் சும்மா ‘காமெடி டைம்' என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லி ஆஃப் செய்து விட்டார் அண்ணன் அழகிரி.
ஸ்டாலினுக்கு ஆப்பு எங்கேயும் இல்லை அண்ணனே போதும் என்று ஆளுங்கட்சி நமட்டு சிரிப்பு சிரிக்க அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மேற்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட பயணம் கிளம்பிவிட்டார் ஸ்டாலின்.

நீலகிரி நோக்கி பயணம்
கிரியேட்டிவ் டீம் ஐடியாப்படி தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் அவரது டேப்லெட்டில் தயாராக இருக்க அதை பார்த்தபடியே, தனது 13 நாள் சுற்றுப் பயணத்தை அசைபோட்டவாரே ரயிலின் ஏசி கோச்சில் நீலகிரி நோக்கி தனது பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின்.

இருட்டுக்கடை அல்வா
ஸ்டாலின் போகுமிடங்களில் எல்லாம் அந்தந்த ஊர் ஸ்பெஷல் பலகாரங்களை சுவைப்பது வழக்கம் அப்படித்தான் திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வாவை டேஸ்ட் செய்தபடியே மக்களிடம் குறை கேட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
விருதுநகர் மாவட்டத்தில் பயணித்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிக்கும் இடத்திற்குச் சென்று லேசாக சுவைத்துப் பார்த்தார் ஸ்டாலின்.

ஜில் ஜில் ஜிகர்தண்டா
மதுரையில் இரவு நேரத்தில் மக்களை சந்தித்த போதும் ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை சுவைக்கத் தவறவில்லை ஸ்டாலின்.

டீ கடையில் ஸ்டாலின்
டீ கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து டீயை சுவைத்தவாரே மக்களிடம் குறை கேட்டார் ஸ்டாலின். அது அவரது கிரியேட்டிவ் டீம் ஏற்கனவே கொடுத்திருந்த ஸ்பெஷல் டீ தூளில் போடப்பட்ட டீயாக்கும்.

பஸ் பயணம்
அதேபோல பேருந்தில் மக்களோடு மக்களாக பயணித்து குறை கேட்டார் ஸ்டாலின். இவர் துணை முதல்வராக இருந்த போதும் இதே பேருந்தில்தான் திருவாளர் பொது ஜனம் பயணித்தனர்.

சைக்கிள் பயணம்
பல இடங்களில் மக்களை சந்தித்த போது நடைபயணமாகவும், சைக்கிளில் வலம் வந்தும் குறை கேட்டார் ஸ்டாலின் எல்லாம் கிரியேட்டிவ் டீமின் ஐடியாவாக்கும்.

தலைவர்களுக்கு மரியாதை
ஊர்களில் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க தவறவில்லை. அண்ணாசிலை, தேவர் சிலை, பென்னி குக் என தலைவர்களுக்கு மாலை அணிவித்தார்.

கலாம் சமாதியில் அஞ்சலி
ராமேஸ்வரம் பயணத்தின் போது அப்துல் கலாம் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது வீட்டிற்கும் சென்றார்.

மாணவிகளுடன் செல்ஃபி
விவசாயிகள், சுய உதவிக்குழு மகளிருடன் மட்டுமல்லாது கல்லூரி மாணவ, மாணவிகளுடனும் உரையாடினார் ஸ்டாலின். கூடவே செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

பெருமாள் கோவிலில்
சிவகங்கை மாவட்டத்தில் பயணித்த போது கிரியேட்டிவ் டீம் ஸ்கெட்சிலேயே இல்லாத திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்குப் போய் பயபக்தியுடன் ராமானுஜரை வழிபட்டார்.

விவசாயி அவதாரம்
திடீரென்று கரும்புக்காட்டுக்குள் புகுந்து தலையில் துண்டை கட்டிக்கொண்டு டிராக்டர் ஓட்டி விவசாயி அவதாரம் எடுத்தார்.

நெசவாளியின் வீட்டில்
நெசவு செய்பவர்கள் வீட்டிற்குள் சென்று தறி நெய்பவர்களின் குறைகளை கேட்டார். திடீரென்று ஸ்டாலின், தானே நூல் நூற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

மரத்தடியில்
எந்த ஊர் என்றாலும் ஆலமரம், அரசமரத்தடியில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யத்தவறுவதில்லை. மரத்தடி குறைகேட்டது கூடுதல் சுவாரஸ்யம்.

ஸ்மார்ட் லுக் ஸ்டாலின்
அரசியல்வாதி என்றாலே வெள்ளை வேஷ்டி,சட்டைதான் என்ற டிரேட் மார்க் இன்றி கலர் கலர் சட்டையில் பார்மல் லுக்கில் கலக்கினார் ஸ்டாலின். திருச்சியில் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டது செம ஸ்மார்ட்.

அடுத்த கட்ட பயணம்
தென் மாவட்ட பயணம் முடிந்து மேற்கு மாவட்டங்களில் நீலகிரி தொடங்கி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கடலூர் வரை பயணிக்க உள்ள ஸ்டாலின் இம்முறை என்னமாதிரியான அவதாரங்களை எடுக்கப்போகிறாரோ? சமூக வலைத்தளங்களில் என்ன மாதிரியான மீம்ஸ்கள் உலா வரப்போகின்றனவோ காத்திருப்போம்.












Click it and Unblock the Notifications